04
Oct
செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது 'ஹிட்லர்'. செப்டம்பர் 27ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தனியார் மாலில், மிகப்பெரும் மக்கள் திரள் நிரம்பியிருக்க, அவர்கள் முன் 'ஹிட்லர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவிஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றினார். அப்போது 5 வயது குழந்தையுடன் அவர் சேர்ந்து பாடிய பாடலைக் கேட்டு, அங்கிருந்த மக்கள் உற்சாகத்தில் கூக்குரலிட்டு வாழ்த்தினர். இந்த நிகழ்வில் இயக்குநர் தனா பேசியதாவது… என் படம் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். ஆனால் இப்படம் கொஞ்சம் மாறுபட்ட ஆக்சன் படமாக இருக்கும். எனக்கு எல்லாவிதமான படமும் செய்ய வேண்டும் என ஆசை. அந்த வகையில்தான் இந்த ஆக்சன் படம்…