Heroines

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’. 2020ம் ஆண்டு நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியான இந்தப் படம், பக்தி என்ற பெயரில் செய்யப்படும் வியாபாரங்களையும் தகிடுதித்தங்களையும் காமெடியாக சொல்லியது. அதைத் தொடர்ந்து, ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். நயன்தாரா அம்மனாக நடிக்க, அவருடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது, படக்குழு. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். “ ‘மூக்குத்தி அம்மன்’ ஒரு படம் மட்டும் அல்ல, மக்களை உணர்வுரீதியாகக் கவர்ந்த படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து,…
Read More
இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்

இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்

‘சரஸ்வதி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தின் மூலம் சிம்பு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர், வரலட்சுமி சரத்குமார். ஹீரோயினாக மட்டுமின்றி, பலவிதமான கேரக்டர்களில் நடித்து தன் திறமையை நிரூபித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துவந்த வரலட்சுமி, ‘சரஸ்வதி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அவரே முதன்மை வேடத்தில் நடிக்க, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எஸ்.தமன் இசையமைக்க, ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநராக மட்டுமின்றி, தன் சகோதரி பூஜா சரத்குமாருடன் சேர்ந்து இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார், வரலட்சுமி. இதற்காக இருவரும் சேர்ந்து ‘தோசா டைரீஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.
Read More
சினிமாவில் என்ட்ரி குடுத்த சூர்யா – ஜோதிகா மகள் தியா

சினிமாவில் என்ட்ரி குடுத்த சூர்யா – ஜோதிகா மகள் தியா

சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகளான தியா, ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தின் மூலம் இயக்குநராக சினிமாவில் என்ட்ரி குடுத்துள்ளார். முன்னணி நடிகர்களான சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். தியா மும்பையில் படிப்பதால், சூர்யா தன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்து, அங்கேயே வசித்து வருகிறார். இந்நிலையில், ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார், தியா. 13 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம், பாலிவுட்டில் லைட் வுமன்களாகப் பணியாற்றுபவர்களின் அனுபவங்களை மையமாக வைத்து டாக்கு டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆஸ்கருக்கு தகுதி பெறுவதற்காக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரீஜென்சி தியேட்டரில் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12 மணி காட்சியாக இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
Read More
“ஜெய்பீம் படத்துக்குப் பிறகு அப்படி நடக்கும்னு எதிர்பார்த்தேன்” – லிஜோமோல் ஜோஸ்

“ஜெய்பீம் படத்துக்குப் பிறகு அப்படி நடக்கும்னு எதிர்பார்த்தேன்” – லிஜோமோல் ஜோஸ்

“ஜெய்பீம் படத்துக்குப் பிறகு தமிழ்ல எனக்கு நிறைய வாய்ப்புகள் வரும்னு எதிர்பார்த்தேன். ஆனா, அப்படி எதுவும் நடக்கல...” என வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார் நடிகை லிஜோமோல் ஜோஸ். மலையாள நடிகையான லிஜோமோல் ஜோஸ், ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து, ‘தீதும் நன்றும்’, ‘ஜெய்பீம்’, ‘புத்தம்புது காலை விடியாதா’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நடித்தார். சமீபத்தில் கூட ‘காதல் என்பது பொதுவுடைமை’, ‘ஜென்டில்வுமன்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்தார். ‘ஜெய்பீம்’ படத்தில் செங்கேணியாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார், லிஜோமோல் ஜோஸ். அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்ததால், நிறைய ரசிகர்களையும் பெற்றார். ‘ஜெய்பீம்’ படத்துக்குப் பிறகு தமிழில் நிறைய படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்தால், அவரோ வெகு அரிதாக ஒருசில படங்களில் மட்டுமே நடிக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “தமிழ்ல இருந்து என்னைத் தேடி கதைகள் எதுவும் வரல. ‘ஜெய்பீம்’ படம் ரிலீஸானபிறகு நிறைய கதைகள் வரும்னு நினைச்சேன். ஆனா,…
Read More