தேதியை முடிவுசெய்த வெற்றிமாறன் – சிம்பு: வெயிட்டிங்கில் ரசிகர்கள்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் புரோமோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

‘விடுதலை 2’ படத்தைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார், வெற்றிமாறன். சிம்புவின் 49-வது படமான இதை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

வடசென்னையில் உள்ள கேங்ஸ்டரை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படம், ‘வடசென்னை’ படத்தில் காட்டப்பட்ட அதே காலகட்டத்தில் நடக்கிறது. அத்துடன், ‘வடசென்னை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் இதில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், இளமை மற்றும் முதுமை என இரண்டு காலகட்டங்களில் சிம்பு நடிப்பதாகச் சொல்கிறார்கள். இதன் புரோமோ வீடியோ, அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதன்முறையாக வெற்றிமாறன் – சிம்பு இருவரும் இணைந்திருப்பதால், இருவரின் ரசிகர்களும் இந்தப் படத்துக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.