mookuthi amman 2

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக், ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகியுள்ளது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், நயன்தாரா அம்மனாக நடித்து வெளியான படம் ‘மூக்குத்தி அம்மன்’. 2020ம் ஆண்டு நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியான இந்தப் படம், பக்தி என்ற பெயரில் செய்யப்படும் வியாபாரங்களையும் தகிடுதித்தங்களையும் காமெடியாக சொல்லியது. அதைத் தொடர்ந்து, ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். நயன்தாரா அம்மனாக நடிக்க, அவருடன் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது, படக்குழு. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். “ ‘மூக்குத்தி அம்மன்’ ஒரு படம் மட்டும் அல்ல, மக்களை உணர்வுரீதியாகக் கவர்ந்த படைப்பு. பக்தி, மர்மம், நகைச்சுவை என அனைத்தையும் கலந்து,…
Read More