ram charan

இலங்கையில் படமாகும் ‘பெத்தி’

இலங்கையில் படமாகும் ‘பெத்தி’

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் 'பெத்தி' படத்தின் பாடல் படப்பிடிப்பு, இலங்கையில் நடைபெறுகிறது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில்,  பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கிராமிய அதிரடி திரைப்படமான 'பெத்தி' படத்தின் தயாரிப்பு பணிகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன. புச்சி பாபு சானா இயக்கும் இப்படத்தில், ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கின்றார். விருத்தி சினிமாஸ்  சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பெருமையுடன் வழங்கும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு சானா மற்றும் குழுவினர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை சென்றுள்ளனர். அங்கு நாளை முதல் ஆரம்பமாகும் படப்பிடிப்பில், இலங்கைத் தீவின்  பல அற்புதமான இடங்களில், ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் பங்குபெறும் ஒரு அழகான பாடல் படமாக்கப்பட உள்ளது. இப்படத்திற்கு ஆஸ்கர்…
Read More
ராம் சரணின் ‘பெடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ராம் சரணின் ‘பெடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘குளோபல் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் ராம் சரணின் 16வது படத்துக்கு ‘பெடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா’ படத்தை இயக்கிய புச்சிபாபு சனா, இந்தப் படத்தை இயக்குகிறார். கன்னட மெகா ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்கிறார். ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம், பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளராக ஆர்.ரத்னவேலுவும், எடிட்டராக நவீன் நூலியும் பணியாற்றுகின்றனர். விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தை வழங்குகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில்,…
Read More