இயக்குநராகும் வரலட்சுமி சரத்குமார்

‘சரஸ்வதி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், வரலட்சுமி சரத்குமார்.

விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தின் மூலம் சிம்பு ஜோடியாக சினிமாவில் அறிமுகமானவர், வரலட்சுமி சரத்குமார். ஹீரோயினாக மட்டுமின்றி, பலவிதமான கேரக்டர்களில் நடித்து தன் திறமையை நிரூபித்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துவந்த வரலட்சுமி, ‘சரஸ்வதி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் அவரே முதன்மை வேடத்தில் நடிக்க, பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எஸ்.தமன் இசையமைக்க, ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்கிறார்.

இயக்குநராக மட்டுமின்றி, தன் சகோதரி பூஜா சரத்குமாருடன் சேர்ந்து இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்கிறார், வரலட்சுமி. இதற்காக இருவரும் சேர்ந்து ‘தோசா டைரீஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.