Heros

தேதியை முடிவுசெய்த வெற்றிமாறன் – சிம்பு: வெயிட்டிங்கில் ரசிகர்கள்…

தேதியை முடிவுசெய்த வெற்றிமாறன் – சிம்பு: வெயிட்டிங்கில் ரசிகர்கள்…

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் புரோமோ வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ‘விடுதலை 2’ படத்தைத் தொடர்ந்து சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார், வெற்றிமாறன். சிம்புவின் 49-வது படமான இதை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். வடசென்னையில் உள்ள கேங்ஸ்டரை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படம், ‘வடசென்னை’ படத்தில் காட்டப்பட்ட அதே காலகட்டத்தில் நடக்கிறது. அத்துடன், ‘வடசென்னை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோரும் இதில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில், இளமை மற்றும் முதுமை என இரண்டு காலகட்டங்களில் சிம்பு நடிப்பதாகச் சொல்கிறார்கள். இதன் புரோமோ வீடியோ, அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக வெற்றிமாறன் - சிம்பு இருவரும் இணைந்திருப்பதால், இருவரின் ரசிகர்களும் இந்தப் படத்துக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.
Read More
சினிமாவில் என்ட்ரி குடுத்த சூர்யா – ஜோதிகா மகள் தியா

சினிமாவில் என்ட்ரி குடுத்த சூர்யா – ஜோதிகா மகள் தியா

சூர்யா - ஜோதிகா தம்பதியின் மகளான தியா, ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தின் மூலம் இயக்குநராக சினிமாவில் என்ட்ரி குடுத்துள்ளார். முன்னணி நடிகர்களான சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். தியா மும்பையில் படிப்பதால், சூர்யா தன் குடும்பத்துடன் சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்து, அங்கேயே வசித்து வருகிறார். இந்நிலையில், ‘லீடிங் லைட்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியுள்ளார், தியா. 13 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம், பாலிவுட்டில் லைட் வுமன்களாகப் பணியாற்றுபவர்களின் அனுபவங்களை மையமாக வைத்து டாக்கு டிராமாவாக உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 2டி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது. ஆஸ்கருக்கு தகுதி பெறுவதற்காக, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ரீஜென்சி தியேட்டரில் இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2 வரை தினமும் மதியம் 12 மணி காட்சியாக இந்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
Read More
ராம் சரணின் ‘பெடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ராம் சரணின் ‘பெடி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ‘குளோபல் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் ராம் சரணின் 16வது படத்துக்கு ‘பெடி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற ‘உப்பென்னா’ படத்தை இயக்கிய புச்சிபாபு சனா, இந்தப் படத்தை இயக்குகிறார். கன்னட மெகா ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக ஜான்வி கபூர் நடிக்கிறார். ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படம், பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில், ஒளிப்பதிவாளராக ஆர்.ரத்னவேலுவும், எடிட்டராக நவீன் நூலியும் பணியாற்றுகின்றனர். விருத்தி சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு தயாரிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து இந்தப் படத்தை வழங்குகின்றன. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில்,…
Read More
5 வயது குழந்தையுடன் பாடிய  விஜய் ஆண்டனி

5 வயது குழந்தையுடன் பாடிய விஜய் ஆண்டனி

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், தனா இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது 'ஹிட்லர்'. செப்டம்பர் 27ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகும் இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் பல நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் தனியார் மாலில், மிகப்பெரும் மக்கள் திரள் நிரம்பியிருக்க, அவர்கள் முன் 'ஹிட்லர்' படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவிஜய் ஆண்டனி, அங்கிருந்த மக்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து, அவர்களுடன் பாடல் பாடி, நடனமாடி, அவர்களின் ஆசைகளை நிறைவேற்றினார். அப்போது 5 வயது குழந்தையுடன் அவர் சேர்ந்து பாடிய பாடலைக் கேட்டு,  அங்கிருந்த மக்கள் உற்சாகத்தில் கூக்குரலிட்டு வாழ்த்தினர். இந்த நிகழ்வில் இயக்குநர் தனா பேசியதாவது… என் படம் உணர்வுப்பூர்வமானதாக இருக்கும். ஆனால் இப்படம் கொஞ்சம் மாறுபட்ட ஆக்சன் படமாக இருக்கும். எனக்கு எல்லாவிதமான படமும் செய்ய வேண்டும் என ஆசை. அந்த வகையில்தான் இந்த ஆக்சன் படம்…
Read More