04
Oct
மக்களிடம் வரவேற்பு பெற்ற ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார், பிரபு சாலமன். பிரபு சாலமன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம், ‘கும்கி’. மனிதனுக்கும் யானைக்குமான பாசப்பிணைப்பை அழகாக காட்சிப்படுத்திய இந்தப் படம், காதலையும் கொண்டாடியது. விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார், பிரபு சாலமன். ஆனால், விக்ரம் பிரபுவுக்குப் பதிலாக மதி என்ற புதுமுகம் நடித்துள்ளார். அவருடன் சேர்ந்து ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடித்துள்ளனர். முதல் பாகத்தைப் போலவே இந்தப் படமும் மனிதனுக்கும் யானைக்குமான பாசப்பிணைப்பைப் பற்றிப் பேசுகிறது. ‘கும்கி’ முதல் பாகத்துக்கு ஒளிப்பதிவு செய்த எம்.சுகுமார் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். தவல் காடா தயாரித்துள்ள இந்தப் படத்தை, பென் ஸ்டுடியோஸ்…